தொகுப்பு | பொங்கல் திருநாள் வாழ்த்து கவிதைகள் RSS feed for this section

பொங்கல் வாழ்த்து

10 ஜன

* * * பொங்கல் வாழ்த்து * * *

மங்கல அணியும் பொட்டும்
. . மரகத மணிபோற் கண்ணும்
குங்கும நுதலும் தண்டைக்
. . குலுங்கிடும் காலும் மஞ்சள்
தங்கிய முகமும் வண்ணத்
. . தடம்பணைத் தோளும் கொண்ட
மங்கையர் கைபார்த் துண்ண
. . மலர்கவே பொங்கல் நன்னாள்.

பூச்சிறு மழலை மேனி
. . புத்துடை நகைகொண் டாட
ஆச்சியர் துணைவர் சேர
. . ஆனந்தத் தமிழ்ப்பண் பாட
பாற்சுவை வழங்குநன் னாள்
. . பழந்தமிழ் வளர்த்த பொன் னாள்
போற்சுவை நாளொன் றில்லை
. . பொலிகவே இன்பப் பொங்கல்.

தமிழ்ப் பொங்கல்

10 ஜன

கரும்புக்கை நீட்டுகின்ற தோட்டம், எங்கள்
கற்கண்டுச் செந்தமிழை நினைவுறுத்தும்
விரிந்தஇலை பரப்புகின்ற வாழை, பொங்கல்
விருந்துக்கு வரச்சொல்லி அழைப்பு வைக்கும்
வரிசைபெறும் நெற்குவியல் பொன் மலைபோல்
வளம்காட்டி வறுமைக்கு விடை கொடுக்கும்
தரிசுநிலம் திருத்திவந்த பயன் அனைத்தும்
தைத்திங்கள் தரும்பொங்கல் எடுத்துரைக்கும்
நன்செய்யும் புன்செய்யும் தழைத்து நிற்கும்
நல்லழகில் தோய்ந்தவர்க்கு நலிவே இல்லை
மண்செய்யும் விந்தைகளின் விளக்கம் ஆகும்
மருதத்தின் மண்புசொல்ல வார்த்தை யில்லை
புண்செய்து போட்டநிலம் நம்மைப் பார்த்துப்
‘புசி’என்று புகன்றிடவே போகும் தொல்லை !
பண்செய்த தமிழாலே உழவைப் போற்றிப்
பாடாமல் நமக்கிங்கே என்ன வேலை ?
***
இக்பால்

வருக தை பொங்கலே

8 ஜன
தை பொங்கலே
மனங்கள் பொங்கி வழியும் நாளில் ……………
பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா?
சிறகில் தீ பிடித்தாலும் …
அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்!
வருக தை பொங்கலே…!!

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

8 ஜன
தைப்பெண்ணே
வருக வருக
உன் வரவால் …எம்
மக்கள் மனம்..
மகிழட்டும்..
துவண்டு கிடக்கும்
எம் …சம்முதாயம்..
துணிந்து எழட்டும்
வாடீக் கிடக்கும்..
வயல் வெளியெங்கும்..
வளங்கள்…பெருகட்டும்….
பொங்கும் மங்களம்
எங்கும் பொழிய
பொங்கலே நீ…
பொங்கி….வழிக…..
நிலாமுற்றத்து உறவுகள் அனைவர்க்கும்
எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் திருவிழா..

8 ஜன
வங்கக் கடல் தமிழன் எங்கு குடி இருப்பினும்
சங்கத் தமிழ் சிறப்பை மறந்து வாழ்வனோ

பொங்கல் திருநாளினை போற்றி மகிழ்ந்திட
தங்க நிறச் சூரியத் தலைவனை முந்தி எழுந்து
பொங்கிடப் புதுப் பானை அலங்கரித்து..

செங்கரும்புப் பந்தல் தொங்க மாவிலை தோரணம் முடிக்க..

மங்களம் நிறைந்த மனையாள் நீராடிப் புது பட்டுடுத்தி
தங்கமக்கள் சிறுமழழை சூழ சேவலும் மயிலும் கூவ
வெங்கலமாய் பொங்கி வரும் கதிரவனை வணங்கி
செங்கீற்று விள்க்கேற்றி கற்பூற சுடரேற்றி விறகடுக்கி
தங்கமென சிவந்த தணலடுபில் வைத்த் புதுப்பானை நீரூற்றி

அங்கமழ பாடுபட்டு உழுவார் நிலம் புலந்த் புத்தரிசி
செங்கமலச் சோலை சேகரித்த தேனோடு பாகும் பருப்பும்
எங்கள் குலமாத பொழிந்த பசும் பாலும் நெய்யுமிட்டு
பொங்கலோ பொங்கல் எனக் குரவியிட்டு வரப்புயர வாழ்வளித்த
மங்காத செல்வம் இயற்கை அண்ணைக்கு நன்றிப் பெருவிழா

சங்க தமிழினதின் பெருவிழா பொங்கல் திருவிழா..

மணிவண்ணன்

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

8 ஜன
தைப்பாவாய் தைப்பாவாய்
வாசலில் வந்தாள் தமிழ்ப்பாவாய்
தீபங்கள் ஏந்திய கைப்பாவாய்
தென்றலென வந்தாள் தேன்பாவாய்

மார்கழிப் பெண்ணுக்கு இளம்பாவாய்
மாதங்கட்கெல்லாம் தலைப்பாவாய்
தேரினில் ஏறிய தென்பாவாய்
ஊர்வலம் வாராய் ஒளிப்பாவாய்

சூரியதேவன் சுடர்ப்பாவாய்
சுந்தரவதனச் செம்பாவாய்
ஏருழவர் கை உழைப்பாவாய்
ஏழை எளியவர்க்கு இன் பாவாய்

அன்பென்று கொட்டு முரசாவாய்
அனைவர்க்கும் வாழ்வு என்றறைவாய்
இன்புறப் புல்லாங் குழலிசைப்பாய்
இனிய தமிழ்க்காதல் யாழிசைப்பாய்

பொன் யுக வாசல் திறந்ததென்று
கொம்பெடுத்தூதடி எம்பாவாய்
சங்கு முழங்கடி எம்பாவாய்
சங்கடம் தீர்ந்திட கைகோர்ப்பாய்

கூத்துப் போடடி பெண்பாவாய்
பறைகொட்டி முழங்கடி எம்பாவாய்
தக்கத் திமிதிமி தக்கத் திமியென
நர்த்தனம் ஆடடி பொற்பாவாய்

போற்றி பாடடி பொன்பாவாய்
புதுயுகத்தின் பொங்கல் எம்பாவாய்
ஆற்றுகலைகள் அத்தனையும் பொங்க
ஆனந்தக் கும்மி அடி பாவாய்

சு.வில்வரத்தினம்

பொங்கல் திருநாள்

8 ஜன

புதுப்பொலிவும், பொன்விடியலும்
தந்து நற்பொழுதுபுலரும்
என்ற நம்பிக்கையுடன்
மலர்ந்துள்ள சித்திரை
உலகத் தமிழர்களின்
உள்ளம் எல்லாம் குளிரும் வகையில்
தமிழ் ஈழம் பிறக்கவும்,
தமிழர் தாகம் தணியவும்,
ஈழத்தமிழர் இன்னல் தீரவும்,
தாய்த் தமிழகத்தின் குமுறல் நீங்கவும் வழிவகுக்கட்டும்

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

8 ஜன
அனைத்து தமிழர்களும்
சிறந்து வாழ
தமிழர் திருநாளாம்
விவசாயிகளின் நன்றித் திருநாளான
பொங்கல் நாளில்..
உங்களுக்கு எனது
பொங்கல் வாழ்த்துகள்.
உங்கள் நண்பர்களுக்கும்
உறவினர்களுக்கும்
மகிழ்ச்சியும்
அன்பும் மற்றும் எல்லா வளங்களும்
பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

8 ஜன

பொங்கும் பொங்கலைப்போல்

அனைவரது மனதிலும்,

வீட்டிலும், நாட்டிலும்

இன்பங்கள் பொங்க வேண்டும்.

அளவற்ற செல்வங்கள் வந்து

அரவணைக்க வேண்டும்.

தமிழர் தினமான தை
”தை” தமிழர் வாழ்வில் வளத்தை சேர்க்கட்டும்.

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

8 ஜன
எல்லோருக்கும்
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
தை, புது நம்பிக்கைகளையும்
மகிழ்ச்சியையும்
செழிப்பையும்
பிரசவிக்கட்டும்…
பொங்கலோ பொங்கல்!
Follow

Get every new post delivered to your Inbox.