டாஸ்மாக் ஹைக்கூ

21 Dec

அரசாங்கம் நடத்தும்
அவமானச்சின்னம்
 டாஸ்மாக்

பாதை தவறியவர்கள்
போதை வாங்குமிடம்
 டாஸ்மாக்

காந்தியடிகளுக்கு பிடிக்காத இடம்
குடிமகன்களுக்கு பிடித்த இடம்
 டாஸ்மாக்

குடிமகன்களிடமிருந்து கரந்து
அரசாங்கத்திற்கு வழங்கும்
கற்பக காமதேனு டாஸ்மாக்

வருமானம் பெருகப் பெருக
அவமானம் பெருகுகின்றது
டாஸ்மாக்

பாஸ் மார்க் வாங்கியும்
க்ளாஸ் பாட்டிலுடன் வேலை
டாஸ்மாக்

ஈழம் அழிந்தாலும் கவலையின்றி
தமிழினம் ஒழிந்தாலும் கவலையின்றி
நிரம்பி வழியும் கூட்டம் டாஸ்மார்க்

போதை சுகத்தில் குடிமகன்
சொல்லில் அடங்கா சோகத்தில் குடும்பம்
டாஸ்மாக்

விதவைகளின் எண்ணிக்கையை
விரிவாக்கம் செய்யுமிடம்
டாஸ்மாக்

வருங்கால தூண்கள்
வழுக்கி விழுமிடம்
டாஸ்மாக்

இலவசமாய் நண்பன் தருவதாக
இளித்துக் கொண்டு போகுமிடம்
டாஸ்மாக்

இமயமாக உயர வேண்டியவன்
படு பாதாளத்தில் விழுமிடம்
டாஸ்மாக்

இரா. இரவி, மதுரை

ஒரு பதில் to “டாஸ்மாக் ஹைக்கூ”

  1. Viju திசெம்பர் 22, 2009 இல் 7:32 பிப #

    ஈழம் அழிந்தாலும் கவலையின்றிதமிழினம் ஒழிந்தாலும் கவலையின்றிநிரம்பி வழியும் கூட்டம் டாஸ்மார்க்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: