தமிழீழம்

22 டிசம்பர்
எனது ஈழக் கனவு
தனித் தமிழீழம் வேண்டும் – அதில்
தமிழினம் மட்டுமே வாழ வேண்டும்.
புரட்சி வெடிக்கும் முகத்தில் – துளிப்
புன்னகை மலர வேண்டும்.
வெறியாட்டம் கண்ட கண்கள் – இனி
வாண வேடிக்கைகள் காண வேண்டும்.
சயனைடு எடுத்தக் கைகள் – இனிச்
சாகுபடி செய்ய வேண்டுமே தவிரச்
சாகும்படிச் செய்யக்கூடாது.
சாவுகளைக் கண்ட மனிதர்கள் – மனச்
சாந்தத்தோடு வாழ வேண்டும்.
ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் – கடவுள்
ஆலயம் நோக்கி நடக்க வேண்டும்.
வெடிகுண்டு ஏந்திய கைகள் – தமிழ்
வெண்பாட்கள் இயற்ற வேண்டும்.
குண்டு விழுந்த கானகங்களில் – குயிலின்
கானம் கேட்க வேண்டும்.
ஈழத்திற்காக உயிர்த் துறந்தவர்களை – எந்நாளும்
தமிழினம் போற்றிப் பாட வேண்டும்.
மனிதர்களை வதைத்தவர் நெஞ்சில் – இனியாவது
மனிதம் மலர வேண்டும்.
தனித் தமிழீழம் வேண்டும் – அதில்
தமிழினம் மட்டுமே வாழ வேண்டும்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: